Posts

Showing posts from May, 2018

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

Image
அன்று பல வீட்டு வாசல்களில், ஒரு கறுப்பு கயிற்றில், படிகாரம், மிளகாய், மிளகு, எலுமிச்சம் பழம், ஈச்சமுள், மஞ்சள் மற்றும் தேங்காய் பொருட்களை ஒரு கருப்பு கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். இது, கண் திருஷ்டிக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு என்று நினைத்திருப்போம். ஆனால் இது நம் உயிரை காக்க உதவும், முதலுதவி பெட்டி. விஞ்ஞானம் வளராத மற்றும் மின்சாரம் இல்லாத அக்காலத்தில், இரவில் வெளியில் சென்று வரும்போது, ஏதேனும் விஷ பூச்சிகளோ, பாம்போ கடித்து விட்டால்,  உடனே முதலுதவி செய்யதான் இந்த பொருட்கள் அடங்கிய அந்த மருத்தவ கயிற்றை, வீட்டு வாசலில் தொங்க விட்டு இருந்தார்கள், நம் முன்னோர்கள்... கைகளிலோ அல்லது கால்களிலோ விஷ பூச்சிகள் கடித்துவிட்டால், விஷம் மேலும் உடலில் பரவாமல் தடுக்க, கயிற்றால் கட்டி, கடி வாயில் படிகாரத்தை தேய்ப்பார்கள். இதனால் உடலில் எரிச்சல் குறையும். விஷக் கடியாக இருந்தால், மிளகாய் அல்லது மிளகை சுவைக்கும் போது, காரம் இல்லையென்றால் கடுமையான விஷக்கடி என்றும், காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்து கொள்வார்கள். விஷப் பூச்சி கடிப்பதால் ஏற்படும் களைப்பை போக்க

அழுபவர்கள் எல்லாம் கோழைகள் அல்ல!

Image
"ஒரு படம் பார்க்கும் போது அதை பார்த்து அழுபவர்கள் மிக உறுதியானவர்கள்" என ஆய்வு சொல்கிறது. "அவர்கள் பண்பானவர்களாகவும், இரக்கம் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனவும்,  இவர்களுக்கு மன தைரியம் அதிகமாக இருப்பதால், அவர்களால் மற்றவர்களின் விஷயங்களை பார்த்து, அதில் இருக்கும் கஷ்டங்களை பற்றி சிந்தித்து பார்க்க முடிகிறது" எனவும் ஆய்வு சொல்கிறது. "சில மனிதர்கள், திரையில் வரும் காட்சிகளை தங்கள் வாழ்க்கையில் நடந்துஇருப்பதோடு ஓப்பிட்டு பார்ப்பதால் மனதளவில் வருத்தப்பட்டு அழுகிறார்கள்" சில சமயங்களில் , புத்தகம் படிக்கும் போதும் சிலர் அழுகிறார்கள். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது. " கண்ணீரால்  கொஞ்ச நேரத்திலேயே நிறைய விஷயங்களை  வெளிப்படுத்த முடியும்"   என்று அழுகையைப்பற்றி  " Adult Crying "   என்ற புத்தகம் சொல்கிறது . "அழுகை , துக்கத்தின் வடிகால்" என சில நிபுணர்கள் சொல்கிறார்கள் . நம் கண்ணீரே நம் கண்ணுக்கான கிருமி நாசினி மருந்து . ஆம்

கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி?

Image
நாம் எப்பொழுதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் நமது வாழ்க்கையில் அவ்வப்போது ஏதேனும் தொல்லைகளோ அல்லது பிரச்சனைகளோ தலை தூக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த பிரச்சனைகளை சமாளிக்கும் விதம் ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு வேறுபடுகிறது. இது அவரவர்களுடைய ஆளுமை திறனை பொருத்தது ஆகும். சிலர் தெளிவற்ற மனநிலையில் குழப்பத்துடன் இருப்பார்கள். இந்த பிரச்சனையில் இருந்து விடுப்பட்டாலே போதுமானது என்று அவர்களுக்கு தோன்றும். ஆனால் சிலர், இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளாமல் அந்த பிரச்சனையை எளிதாக கையாளுவார்கள். இவ்வாறு அலட்டிக் கொள்ளாமல் பிரச்சனையை சமாளிப்பதற்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள் என்ன என்பதை பற்றி இங்கு காண்போம். எதிலும் நம்பிக்கை ✵ நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். ✵ இது என்னால் செய்யக்கூடிய விஷயம்தான் என்ற நம்பிக்கையை எப்போதும் மனதில் பதிந்திருக்க வேண்டும். ✵ நமக்குள் திறன் இருக்கிறது என்ற நம்பிக்கையும், நம்மை பற்றிய நேர்மறையான எண்ணமும் பிரச்சனைகளை சமாளிக்க போதுமான தைரியத்தை அ

ஸ்டெர்லைட்ஆலையும் அதன் பின்னனியும்

Image
1. உரிமையாளர் - அனில் அகர்வால் 2. தலைமையிடம் - இலண்டன்,இங்கிலாந்து 3. நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ் 4. அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி 5. முக்கிய உற்பத்தி - தாமிரம் (Copper) 6. கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் 7. முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத் 8. அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா 9. அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா, ரத்னகிரி 10. அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார் 11. அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு 12. அடிக்கள் நாட்டியவர் -  முதல்வர் ஜெ.ஜெயலலிதா (1994) 13. ஆலை இயங்க அனுமதியளித்தவர் - முதல்வர் மு.கருனாநிதி (1996) 14. அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம் 15. முதல் உண்ணாவிரத போராட்டம் -(1996 ) 16. போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை 17. தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி 18. ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7 19. முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997) 20. இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1) 21. மூன்றாவது விபத்து -

போர்!

Image
இந்த வேகாத வெய்யிலில் விரும்பியாடா போராடுகிறோம்? கர்நாடகாவில் தமிழ்நாட்டில் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கவேண்டியாடா போராடுகிறோம்? ஊரையடித்து உலையில் போட்டு லெக் பீஸ் சுவைக்கவாடா போராடுகிறோம்? மின்விசிறியைச் சுழலவிட்டு சூப்பர் சிங்கர் பார்க்க ஆசையில்லாமலாடா போராடுகிறோம்? கோடைவிடுமுறையில் ஊட்டி கொடைக்கானல் போய் வெக்கையழிக்க விருப்பமின்றியாடா போராடுகிறோம்? இரும்புத்திரை பாஸ்கர் ஒரு ராஸ்கல் நடிகையர் திலகம் ரிலீஸ் படங்கள் பார்த்து விசிலடிக்க தோணாமலாடா போராடுகிறோம்? போராடினால் புறநானூற்று வீரமெனப் பரிசும் பதக்கமும் தருவீர்களென்றாடா போராடுகிறோம்? குடிக்கும் தண்ணீரில் துத்தநாகம் நாற்று நடும் வயல்களில் தாமிரக்கழிவுகள் ஒரு ஆலை எங்கள் இதயத்தில் இரைப்பையில் நுரையீரலில் புற்றைக் கொண்டு வந்திருக்கிறது! அடேய்! அமைதிப் பூங்காவைத் துப்பாக்கியால் பாதுகாக்கிறவர்களே எங்கள் தங்கை இரவெல்லாம் இருமலோடு தூங்கச் சிரமப்படுகிறாள் அப்பனுக்கோ தீராத ஆஸ்த்துமா அம்மா கேன்சரில் செத்தே போய்விட்டாள். சொந்தங்களோடு உழைத்து உண்டு உறங்கி நிம்மதியாக வாழவேண்ட

ஏன் இன்னும் உலக அதிசயமாக அறிவிக்க முன்மொழிவில்லை?

Image
பிரகதீஸ்வரர் கோயில் – அதன் வரலாற்றை கூறுகிறோம் கேளுங்கள் ... பிரகதீஸ்வரர் என்பது ஒரு தமிழ் பெயர் அல்ல. அது ஒரு சம்ஸ்கிருத பெயர்... தமிழ் கோவிலுக்கு எப்படி சம்ஸ்கிருத பெயர்வந்தது தெரியுமா? பிரகா என்பது சமஸ்கிருதத்தில் மிகபெரிய என்றும், ஈஸ்வரா என்பது சிவனையும் குறிக்கும்... 17,18 நூற்றாண்டுகளில் மராத்திய மன்னர்கள், தமிழகத்தில் சில பகுதிகளை ஆண்ட காலைதில் தான் இந்த பெயர் வந்தது... தஞ்சை பெரிய கோவிலின் உண்மையான பெயர் பெருவுடையார் கோவில்   பெயர் மட்டும் தமிழ் அல்ல.... இது முழுக்க முழுக்க தமிழ் கோவில்.. சொன்னால் ஆச்சரியபடுவீர்கள்... கோவிலின் கருவறையில் இருக்கும் லிங்கத்தில் உயரம் 12 அடி "அது உயிர் எழுக்களின் எண்ணிக்கை" லிங்கத்தில் பீடத்தின் உயரம் 18அடி . "அது மெய் எழுக்களின் எண்ணிக்கை" கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி உயரம். அது "தமிழ் உயிர்மெய் எழுக்களின் எண்ணிக்கை" கோவிலின் லிங்கதிர்க்கும், வெளியில் இருக்கும் நந்திக்கும் நடுவே இருக்கும் தொலைவு 247 அடி. அது "தமிழின் மொத்த எழுக்களின் எண்ணிக்கை".  இந்த கோவில் கட்டுமான பணிக்காக மொத்தம்

தமிழும் மலேசியர்களும்! உண்மை வரலாறு

Image
தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும் என - சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரை உருவாக்கியதிலும் , அதன் மேம்பாட்டிலும் தமிழர்களின் பங்கு அளப்பரியது எனவும், அதனால்தான் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது எனவும் அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார். இன்றுவரை, அந்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. சிங்கப்பூர் மட்டும் அல்ல, மலேசிய அரசின் தரவுகளின்படி , அந்நாட்டு மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சுமார் 8%. அந்த 8% பேரில் சுமார் 95% பேர் தமிழர்கள். இன்றைய சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் தமிழின் அன்றைய தொடர்பு என்ன என்பதின் வரலாற்றை தெரிந்துகொள்வோம்! 1965- ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கு முன்பு வரை இரு நாடுகளும் ஒன்றாகவே இருந்தது ! மலேசியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்துடன் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள். இன்று மலேசியாவில் ஏறத்தாழ 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் உண்டு. ஆம்! 11 ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந

பழிவாங்குதல்

Image
வாழ்ந்து காட்டுவதை விட, பெரிய பழிவாங்குதல் வேறொன்றும் இல்லை

விரும்பினேன் !

Image
நீ... நீ இல்லை, நாம் என உணர்ந்ததால், விரும்பினேன் ! உன்னிடம் உனக்கு பிடிக்காத விஷயங்கள்,  என்னை உனக்கு பிடிக்க வைத்து இருக்கலாம் ! காரணங்களுக்காக ஒருவரை பிடிப்பது, காதல் இல்லை...  அப்படி பிடித்தால் அது காமம் !

காரணங்கள்

Image
நீ விலகி போக சில  காரணங்கள்  சொல்கிறாய்... நான் உன்னை விலகாமல் இருக்க, ஆயிரம் காரணங்கள் சொல்வேன்...

அப்பாற்பட்டவள் நீ!

Image
உன்னை பிடிக்க ஆயிரம் காரணங்கள் தேவையில்லை ...  காரணங்களுக்கு அப்பாற்பட்டவள் நீ!