ஏன் இன்னும் உலக அதிசயமாக அறிவிக்க முன்மொழிவில்லை?

பிரகதீஸ்வரர் கோயில் – அதன் வரலாற்றை கூறுகிறோம் கேளுங்கள் ...
பிரகதீஸ்வரர் என்பது ஒரு தமிழ் பெயர் அல்ல. அது ஒரு சம்ஸ்கிருத பெயர்... தமிழ் கோவிலுக்கு எப்படி சம்ஸ்கிருத பெயர்வந்தது தெரியுமா?
பிரகா என்பது சமஸ்கிருதத்தில் மிகபெரிய என்றும், ஈஸ்வரா என்பது சிவனையும் குறிக்கும்... 17,18 நூற்றாண்டுகளில் மராத்திய மன்னர்கள், தமிழகத்தில் சில பகுதிகளை ஆண்ட காலைதில் தான் இந்த பெயர் வந்தது...
தஞ்சை பெரிய கோவிலின் உண்மையான பெயர் பெருவுடையார் கோவில் 
பெயர் மட்டும் தமிழ் அல்ல.... இது முழுக்க முழுக்க தமிழ் கோவில்.. சொன்னால் ஆச்சரியபடுவீர்கள்...


கோவிலின் கருவறையில் இருக்கும்
லிங்கத்தில் உயரம் 12 அடி "அது உயிர் எழுக்களின் எண்ணிக்கை"
லிங்கத்தில் பீடத்தின் உயரம் 18அடி . "அது மெய் எழுக்களின் எண்ணிக்கை"
கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி உயரம்.
அது "தமிழ் உயிர்மெய் எழுக்களின் எண்ணிக்கை"
கோவிலின் லிங்கதிர்க்கும், வெளியில் இருக்கும் நந்திக்கும் நடுவே இருக்கும் தொலைவு 247 அடி. அது "தமிழின் மொத்த எழுக்களின் எண்ணிக்கை".

 இந்த கோவில் கட்டுமான பணிக்காக மொத்தம் 5000 யானைகள் பயன்படுத்த பட்டுள்ளது. 30 வருடமாக கட்டிய இந்த கோவிலில், வேலை செய்த அனைவரின் பெயரையும் இங்கே கல்வெட்டில் பொரித்து வைத்துள்ளனர்.

கோவிலின் உச்சியில் உள்ள 80 டன் கல்லை, தரையில் இருந்து, கோபுரத்தின் உச்சிக்கு எடுத்து செல்ல மட்டும் ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது.
இந்த கோவில் முழுக்க முழுக்க புவிஈர்ப்பு விசையை கணித்து கட்டிய கோவில். ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலின்  நந்தி , இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தி.
இந்த கோவில் கிரானைட் கற்களால் கட்டிய கோவில்.. ஆனால் சுற்றுவட்டாரத்தில் 60 கிலோ மீட்டருக்கு கிரானைட் மலைகளே கிடையாது.. ஆனால் எப்படி இது சாத்தியம் என்று இன்றும் விளங்கவில்லை..

இந்த கோவிலின் உட்புரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அராய்ச்சி செய்ததில் உள்ளே பல வெளிநாட்டு மனிதர்கள் உருவங்களும், வெளிநாட்டு அரசர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுருக்கிறது. இதை பார்க்கும் போதும், ஆயிரம் வருடங்களுக்கு  முன்னே ராஜராஜ சோழன் பலநாட்டு மன்னர்களோடு நட்பு வைத்திருப்பது தெரிகிறது.

தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் சென்று பார்க்க வேண்டிய கோவில் தஞ்சை பெரிய கோவில்... ராஜராஜ சோழன் நடந்த அந்த இடத்தில் நாமும் நடந்து உணர்ச்சி பொங்குவோம்...



கட்டிடக்கலையில் ஓர் அற்புதம் இக்கோவில் என UNESCO-விற்கு தெரிந்த உண்மை ஏன் நம்  நாட்டிற்கு தெரியவில்லை?

தாஜ்மஹாலை உலக அதிசயத்திற்கு அனுப்பதெரிந்த  நம் நாட்டிற்கு,
அதைவிட ஆயிரம் மடங்கு அதிசயம் நிறைந்த, நம் தஞ்சை பெரியகோவிலை ஏன் உலக அதிசயத்திற்கு முன்மொழியவில்லை.

கட்டப்பட்டு கொண்டிருக்கும் போதே சாய்ந்த பீசா கோபுரம் உலக அதிசயமாம்...
மோசமான கட்டிட கலையெல்லாம் அதிசயமாக இருக்கும் போது,
கட்டி ஆயிரம் ஆண்டுகள் மேலாகியும், ஒரு டிகிரி அளவுக்கூட அசையாத நம் தஞ்சை பெரிய கோயில் ஏன் இன்னும் உலக அதிசயமாக அறிவிக்க முன்மொழிவில்லை?


அகமும் புறமும் போற்றிய  மறத்தமிழனின் மிச்சமாடா நாம்...
தமிழையும் தமிழ் கலைநயத்தையும் போற்றி, பாதுகாப்போம்... 

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...