Posts

Schedule J | Medical Crime | இனி விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்

Image
ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 உள்ளது எனவும்,  இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால் , குணப்படுத்த முடியும் என்றோ , குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று சட்டம் எச்சரிக்கிறது. அந்த சட்டம் என்ன, அந்த 51 நோய்கள் என்ன என்பதை தெரிந்துகொண்டு, இனி விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். 1. எய்ட்ஸ் 2. நெஞ்சுவலி 3. ‘ அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய் 4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு 5. தலை வழுக்கை 6. கண்பார்வை அற்ற நிலை 7. ஆஸ்துமா 8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை 9. கண்புரை 10. தலைமுடி வளர , நரையை அகற்ற 11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ , பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது. 12. பிறவிக் கோளாறுகள் 13. காது கேளாமை 14. நீரிழிவு நோய் 15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள் 16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும் 17. மூளைக்காய்ச்சல். 18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல். 19.

செந்தமிழின் தேனீ பாரதி

Image
குழிக்குள் ஆயுதம் வைத்துப் பதுக்கி தாக்கியவர்கள் இடையில், மொழிக்குள், ஆயுதம் வைத்து தாக்கியவன் நம் பாரதி… ''பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்திடுனும்... கட்டி இழுத்து கால் கை முறிந்து அங்கம் பிளந்து இழந்து துடி தடினும்... பொங்கு தமிழை பேச மறப்பேனோ'' என்று கர்ஜித்த காளை நம் பாரதி… பைந்தமிழின் தேர்ப்பாகன் பாரதி… செந்தமிழின் தேனீ பாரதி… கற்பனைப்புரவியில் கானகத்தின் கடைக்கோடிக்குச்சென்று காதலைச்சொன்னவன் பாரதி… மரணிக்காத மரணம் பெற்றவன் பாரதி… புதைக்கப்படாத   கனவுகள் கொண்டவன் பாரதி… கனவுகளை வார்த்தைகளாய் சொல்லாமல், காவியச்சுவடிகள் பதித்தவன் பாரதி… எழுச்சியின் தொடக்கக்கத்திற்கு தூண்டுகோலாய் இருந்தவன் பாரதி.. கொடுமையை எதிர்த்து நின்று, செய்வது துணிந்து செய் என சொன்னவன் பாரதி.. நேர்படப் பேசி, நையப் புடைத்து, போர்த் தொழில் பழகு என்றவன் பாரதி.. தமிழரின் வீரத்தில் கொஞ்சமும் மிச்சமில்லாமல் பிறந்து வாழ்ந்தவன் பாரதி.. தமிழால், பாரதி தகுதி பெற்றான் தமிழ், பாரதியால் தகுதி பெற்றது… சூரியனின் பாதிப்பு இல

உன் மௌனம்

Image
நீரின்றி தரையில் தவழ்ந்து துடிக்கும் மீனை போல, உணவின்றி உறங்கவிடாமல் உருக்கும் குழந்தை போல, பசியில் நடுங்கும் விரல் போல, நடுநிசியில் ஊளையிடும் நாய் போல, உணர்வுகளை உணர்த்துகிறது  உன் மௌனம்

பெரியார் இருப்பார்! சிலையாக அல்ல... சித்தாந்தமாக!

Image
மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி இவர்.. முன்னேற்ற பாதையை காட்டிய கண்ணாடி இவர்.. பெண்ணுரிமைக்கு முன்னுரை எழுதி, பெண்ணடிமைக்கு முடிவுரை எழுதியவர்... சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி இவர்... இறுதிவரை உழைத்து, உறுதியாய் இருந்தவர்.. எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால், பகுத்தறிவித்தவர் இவர்.. இடுப்பில் கட்டிய துண்டை,  தோளில் தொங்க போட வைத்தவர் இவர்.. ஆயுதமும், காகிதமும் பூசை செய்ய அல்ல, புரட்சி செய்ய என்று பொங்கியவர்.. விதியை நம்பி மதியை இழக்காதே என்று எச்சரித்தவர் இவர்... தமிழ்நாட்டின் தன்நீகரில்லா தன்மான தலைவர் இவர்... நெடுமரமாய் காய்ந்து, நெடுஞ்சான் கிடையாய் வாழ்ந்து, வசம்போல் சுருண்டு கிடந்த நம்மை... சுயமரியாதை சுடராய் தலைநிமிர செய்தவர்.. இவர்...   தந்தை பெரியார்... கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்… பெரியாரை பற்றியும், பெரியாரின் வரிகளையும் தெரிந்துகொள்வோம்.. வடக்கில் ஒரு பெரியார் இல்லாமல் போனதின் விளைவை பார்க்கிறேன் !! என்கிறார் - இட ஓதுக்கீடு போராட்டத்தின் போது வி.பி.சிங்... 

கிழவனல்ல, கிழக்குத்திசை இவன்...

Image

பிரம்மன் குடுத்த அறிவை, பிரம்பால் அடித்து நம்முள் புகுத்தியவர் ஆசிரியர்!

Image
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து.” என வள்ளுவன் சொல்கிறான். வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்– ஷேக்ஸ்பியர் தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம் – காந்தியடிகள் இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர் – கார்லைல் நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸண்டர் என வாழ்க்கையில் கற்றலும், கற்பித்தலும் மாறி மாறி இருக்கவேண்டும். கற்றுகொள்பவன் மனிதன், வாழ்க்கை முழுவதும் கற்று கற்று அதை மற்றவர்களுக்கு கற்பிப்பவர்  ஆசிரியர்... சொல்லுக்கும், செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைப்பவர் ஆசிரியர்... ஒரு மாணவனுக்கு இரண்டாம் அன்னையாக இருந்து, அன்பையும் அறிவையும் அளிப்பவர் ஆசிரியர்... பிரம்மன் குடுத்த அறிவை, பிரம்பால் அடித்து நம்முள் புகுத்தியவர் ஆசிரியர்... நம்முள் இருக்கும் வெற்றிடங்களை நிரப்பி, நம்மை வெற்

நடப்பவை யாவும் மனதின் நினைப்புகளே...

Image
தோல்வி என்றாவது, எதற்காவது, எப்போதாவது நம்மை தீண்டாமல் விடுவதில்லை.  தோல்வியும் ஒரு சக்தி தான். அது தரும் நம்பிக்கை அபரிதமானது. அதை உணர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய சாதனையாளர்கள். தோல்வியை கண்டு பயந்து, துவந்து, தோய்ந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு நம்பிக்கையை தரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. கொஞ்சம் நினையுங்கள்.... காத்திருந்து, புரண்டு, தவழ்ந்துதானே முயற்சித்தோம் முதலடிக்கு... தடுமாறி விழ விழ, அடிகள் பட்டுப் பட்டுத்தானே கற்றுகொண்டோம் மிதிவண்டியை... அறியாத போதே நமக்குள்ளிருந்த முயற்சி... இப்போது மட்டும் நமக்குவரலாமோ அயர்ச்சி... ஓட்டப்பந்தயத்தில் கூட, முதலில் வந்தவனை விட்டு மூன்றாமிடத்தில் வந்தவனுக்குதான் முதலில் பரிசு வழங்கப்படுகிறது! வெறும் பார்வையாளனாக நின்று வேடிக்கைப் பார்ப்பதை விட, போட்டியிட்டுத் தோற்பது பன்மடங்கு உயர்வென்று நினையுங்கள்! வீழ்வது தோல்வியென்று யார் சொன்னது நண்பா? வீழ்ந்த நீ  திரும்ப எழுந்து விடாமல் இருப்பதே பெருந்தோல்வி! புலியின் பதுங்கல், பாய்ச்சலுக்கு தான், பயத்தினால் அல்ல! உன் தோல்வியும் கூட வெற்றிக்கான பாய்ச்சலாகவே இருக்கட்டும்!