பெரியார் இருப்பார்! சிலையாக அல்ல... சித்தாந்தமாக!

மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி இவர்..
முன்னேற்ற பாதையை காட்டிய கண்ணாடி இவர்..

பெண்ணுரிமைக்கு முன்னுரை எழுதி,
பெண்ணடிமைக்கு முடிவுரை எழுதியவர்...
சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி இவர்...

இறுதிவரை உழைத்து, உறுதியாய் இருந்தவர்..
எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால், பகுத்தறிவித்தவர் இவர்..

இடுப்பில் கட்டிய துண்டை,  தோளில் தொங்க போட வைத்தவர் இவர்..
ஆயுதமும், காகிதமும் பூசை செய்ய அல்ல, புரட்சி செய்ய என்று பொங்கியவர்..

விதியை நம்பி மதியை இழக்காதே என்று எச்சரித்தவர் இவர்...
தமிழ்நாட்டின் தன்நீகரில்லா தன்மான தலைவர் இவர்...

நெடுமரமாய் காய்ந்து, நெடுஞ்சான் கிடையாய் வாழ்ந்து, வசம்போல் சுருண்டு கிடந்த நம்மை...
சுயமரியாதை சுடராய் தலைநிமிர செய்தவர்..



இவர்...   தந்தை பெரியார்...

கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது,
ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்…

பெரியாரை பற்றியும், பெரியாரின் வரிகளையும் தெரிந்துகொள்வோம்..

வடக்கில் ஒரு பெரியார் இல்லாமல் போனதின் விளைவை பார்க்கிறேன் !! என்கிறார் - இட ஓதுக்கீடு போராட்டத்தின் போது வி.பி.சிங்...

'புத்துலக தொலைநோக்காளர், 'தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்', 'சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை' என இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி 'யுனெஸ்கோ நிறுவனம்'  விருது வழங்கியது பெரியாருக்கு..

'கும்பிடுறேன் சாமி' என்ற அடிமை தமிழ் சொல்லுக்கு மாற்றாக "வணக்கம்" என்ற சம உரிமை சொல்லுக்கு வித்திட்டவர் பெரியார்.



நான் சொல்வதை எற்றுகொள்ளதீர்கள்..
உங்களுக்கு சரி என்றால் மட்டும் ஏற்றுகொள்ளுங்கள் என்று சுய மரியாதையை புகுத்தியவர் பெரியார்.

என்னை பொறுத்தவரை நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை, எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்- என்று கொள்கையோடு இறுதிவரை வாழ்ந்தவர் பெரியார்.

"தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் பெரியார்!

கற்பு என்ற சொல் இருந்தால், அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும் என்று எச்சரித்தவர் பெரியார்..

கொடுமைகளும், அநீதிகளும், ஆட்சியிலே இருந்தாலும் சரி,  அரசியலில் இருந்தாலும் சரி,  சமுதாயத்தில் இருந்தாலும் சரி, தனிமனித வாழ்க்கையில் இருந்தாலும் சரி,  எதிர்த்து ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று முழக்கமிட்டவர் பெரியார்..

எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை! எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும் என்று தன்னம்பிக்கை அளித்தவர் பெரியார்.

சலிப்பும், ஓய்வும் தற்கொலைக்கு சமம் என்றார் பெரியார்..


முன் நோக்கிச் செல்லும்போது பணிவாய் இரு. ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள் என்று அறிவுருதியவர் பெரியார்.

பெண்களிடம் கரட்டியை பிடிக்கி விட்டு புத்தகங்களை கொடுங்கள் என்று புரட்சி செய்தவர் பெரியார்...

இவ்வாறு சமூக நீதி, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இறைமறுப்பு, பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம், கல்வி ஆகியவை சார்ந்து கொண்டிருந்த சிந்தனைகளே பெரியாரின் கொள்கையும், சிந்தனைகளும்...
இவரே ஓர் இயக்கமாகவும், இவரே பிரச்சாரக் களத்தில் முதன்மையான பிரச்சாரகராகவும்,  இவரே ஒரு களப் பணியாளராகவும், இவரே அந்த லட்சியத்திற்குக் கொடுக்கவேண்டிய அனைத்து விலைகளையும் கொடுக்கவேண்டியவராகவும், இவரே லட்சியத்தின் பலனை நேரில் அனுபவித்த தலைவராகவும் என அனைத்துமாக இருந்துள்ளார் பெரியார்!

பெரியார் ஒரு நபர் அல்ல, அது ஒரு தத்துவம்!

இருந்தும் , இறந்தும், 40ஆண்டுகளுக்கு மேலாகியும் எதிரிகளை அச்சம் கொள்ள வைக்கிறார் என்றால் அவரது கொள்கைகளே தமிழகத்தின் ஆணி வேர்.

பெரியார் இருப்பார்! சிலையாக அல்ல...
சித்தாந்தமாக!

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...