பிரம்மன் குடுத்த அறிவை, பிரம்பால் அடித்து நம்முள் புகுத்தியவர் ஆசிரியர்!

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது,
ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு,
எழுமையும் ஏமாப் புடைத்து.” என வள்ளுவன் சொல்கிறான்.

வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்– ஷேக்ஸ்பியர்

தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம் – காந்தியடிகள்
இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர் – கார்லைல்

நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸண்டர்

என வாழ்க்கையில் கற்றலும், கற்பித்தலும் மாறி மாறி இருக்கவேண்டும்.



கற்றுகொள்பவன் மனிதன்,
வாழ்க்கை முழுவதும் கற்று கற்று அதை மற்றவர்களுக்கு கற்பிப்பவர்  ஆசிரியர்...

சொல்லுக்கும், செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைப்பவர் ஆசிரியர்...

ஒரு மாணவனுக்கு இரண்டாம் அன்னையாக இருந்து,
அன்பையும் அறிவையும் அளிப்பவர்
ஆசிரியர்...

பிரம்மன் குடுத்த அறிவை, பிரம்பால் அடித்து நம்முள் புகுத்தியவர் ஆசிரியர்...

நம்முள் இருக்கும் வெற்றிடங்களை நிரப்பி,
நம்மை வெற்றிபடிகட்டு ஏற வைத்தவர்
ஆசிரியர்…

மாதாவும் பிதாவும் நம்மை உலகுக்கு அளித்தவர்கள்;
ஆனால் நாம் யார் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
ஆசிரியர்...

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம்.
நமக்கான குறிக்கோளை குறித்துகொடுத்தவர்
ஆசிரியர்...

நாம் வாழ, நாம் முன்னேற நமக்காக உழைத்தவர்
ஆசிரியர் ...

கற்றவர்களுக்கே கண் உண்டு. கல்லாதவர்களுக்கு முகத்தில் இருப்பது கண் அல்ல, புண் என்கிறார் வள்ளுவர்.

ஆக, கல்வி என்னும் கடலை, நமக்கு கடைந்து கொடுத்தவர்
ஆசிரியர்...

ஒவ்வொரு மாணவனையும் நல்ல மனிதனாக மாற்றுபவர்
ஆசிரியர்...

கல்வி என்பது மதிப்பெண்களில் அல்ல,
நம்மை மற்றவர்கள் மதிப்பதில் தான் உள்ளது என்பதை உணர்ந்து,

கல்வி என்னும் கடலில் கரைந்து, தன் வாழ்வில் பல மாணவர்களை கடந்து,
இன்றும் பல ஆசிரியர்கள் காலம் கடந்தும், காணாமல் நிற்கிறார்கள்.

உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியரின் பெயரை பதிவு செய்து, இந்த பதிவை மற்றவர்களுக்கும் பரவ விடுங்கள்...

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...