செந்தமிழின் தேனீ பாரதி


குழிக்குள் ஆயுதம் வைத்துப் பதுக்கி தாக்கியவர்கள் இடையில்,
மொழிக்குள், ஆயுதம் வைத்து தாக்கியவன்
நம் பாரதி…



''பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்திடுனும்...
கட்டி இழுத்து கால் கை முறிந்து அங்கம் பிளந்து இழந்து துடி தடினும்...
பொங்கு தமிழை பேச மறப்பேனோ'' என்று கர்ஜித்த காளை நம் பாரதி…

பைந்தமிழின் தேர்ப்பாகன் பாரதி…
செந்தமிழின் தேனீ பாரதி…

கற்பனைப்புரவியில் கானகத்தின் கடைக்கோடிக்குச்சென்று
காதலைச்சொன்னவன் பாரதி…

மரணிக்காத மரணம் பெற்றவன் பாரதி…
புதைக்கப்படாத  கனவுகள் கொண்டவன் பாரதி…

கனவுகளை வார்த்தைகளாய் சொல்லாமல்,
காவியச்சுவடிகள் பதித்தவன் பாரதி…

எழுச்சியின் தொடக்கக்கத்திற்கு தூண்டுகோலாய் இருந்தவன் பாரதி..

கொடுமையை எதிர்த்து நின்று,
செய்வது துணிந்து செய் என சொன்னவன் பாரதி..

நேர்படப் பேசி, நையப் புடைத்து, போர்த் தொழில் பழகு என்றவன் பாரதி..

தமிழரின் வீரத்தில் கொஞ்சமும் மிச்சமில்லாமல் பிறந்து வாழ்ந்தவன் பாரதி..

தமிழால், பாரதி தகுதி பெற்றான்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றது…

சூரியனின் பாதிப்பு இல்லாமல் பூமியில் உயிர்கள் இல்லை.
அதுபோல் பாரதியின் பாதிப்பு இல்லாமல் தமிழ் எழுத்தாளன் பாரதிக்கு பின் இல்லை' - கவிப்பேரரசு வைரமுத்து.

Comments

Popular posts from this blog

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...