Posts

Showing posts from September, 2018

உன் மௌனம்

Image
நீரின்றி தரையில் தவழ்ந்து துடிக்கும் மீனை போல, உணவின்றி உறங்கவிடாமல் உருக்கும் குழந்தை போல, பசியில் நடுங்கும் விரல் போல, நடுநிசியில் ஊளையிடும் நாய் போல, உணர்வுகளை உணர்த்துகிறது  உன் மௌனம்

பெரியார் இருப்பார்! சிலையாக அல்ல... சித்தாந்தமாக!

Image
மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி இவர்.. முன்னேற்ற பாதையை காட்டிய கண்ணாடி இவர்.. பெண்ணுரிமைக்கு முன்னுரை எழுதி, பெண்ணடிமைக்கு முடிவுரை எழுதியவர்... சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி இவர்... இறுதிவரை உழைத்து, உறுதியாய் இருந்தவர்.. எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால், பகுத்தறிவித்தவர் இவர்.. இடுப்பில் கட்டிய துண்டை,  தோளில் தொங்க போட வைத்தவர் இவர்.. ஆயுதமும், காகிதமும் பூசை செய்ய அல்ல, புரட்சி செய்ய என்று பொங்கியவர்.. விதியை நம்பி மதியை இழக்காதே என்று எச்சரித்தவர் இவர்... தமிழ்நாட்டின் தன்நீகரில்லா தன்மான தலைவர் இவர்... நெடுமரமாய் காய்ந்து, நெடுஞ்சான் கிடையாய் வாழ்ந்து, வசம்போல் சுருண்டு கிடந்த நம்மை... சுயமரியாதை சுடராய் தலைநிமிர செய்தவர்.. இவர்...   தந்தை பெரியார்... கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்… பெரியாரை பற்றியும், பெரியாரின் வரிகளையும் தெரிந்துகொள்வோம்.. வடக்கில் ஒரு பெரியார் இல்லாமல் போனதின் விளைவை பார்க்கிறேன் !! என்கிறார் - இட ஓதுக்கீடு போராட்டத்தின் போது வி.பி.சிங்... 

கிழவனல்ல, கிழக்குத்திசை இவன்...

Image

பிரம்மன் குடுத்த அறிவை, பிரம்பால் அடித்து நம்முள் புகுத்தியவர் ஆசிரியர்!

Image
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப் புடைத்து.” என வள்ளுவன் சொல்கிறான். வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்– ஷேக்ஸ்பியர் தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம் – காந்தியடிகள் இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர் – கார்லைல் நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸண்டர் என வாழ்க்கையில் கற்றலும், கற்பித்தலும் மாறி மாறி இருக்கவேண்டும். கற்றுகொள்பவன் மனிதன், வாழ்க்கை முழுவதும் கற்று கற்று அதை மற்றவர்களுக்கு கற்பிப்பவர்  ஆசிரியர்... சொல்லுக்கும், செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைப்பவர் ஆசிரியர்... ஒரு மாணவனுக்கு இரண்டாம் அன்னையாக இருந்து, அன்பையும் அறிவையும் அளிப்பவர் ஆசிரியர்... பிரம்மன் குடுத்த அறிவை, பிரம்பால் அடித்து நம்முள் புகுத்தியவர் ஆசிரியர்... நம்முள் இருக்கும் வெற்றிடங்களை நிரப்பி, நம்மை வெற்