கலைஞர் ஓர் சரித்திரம் நிறைந்த சகாப்தம்

தாடியில்லா பெரியார்...
 பொடியில்லா அண்ணா...
தொண்ணுற்று ஐந்து வயதை தொட்ட தொல்காப்பியன்...
எதுகை மோனை இவருக்கு அடிமை...
எழுத்துக்கள்  எது இவரின் கைக்கு வந்தாலும் அது கவிதை...
எதிரியை தூற்றி பேசும்பொழுதும்,
சொல்லும் சொற்களில் இனிமை குறைக்காதவர்...
அரசியல் ஒரு நாகரீகம் என்றால் இவர் நாகரீகத்தின் நதிக்கரை...
திருகுவளையில் பிறந்து திருக்குறளுக்கு,
புது அர்த்தம் புகுத்தியவர்...
ஒரு முகத்தில், பல்முகத்தை கொண்டவர்...
கலைஞர் திரு. மு. கருணாநிதி…
நாட்டின் தன்னிகரில்லா இத்தமிழ் தலைவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது நம் கடமை...



  • 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969-லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் தமிழகத்தை வகிக்க வைத்தவர் கலைஞர்.


  • சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கலைஞர். ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கலைஞர் பார்த்து, "கோயிலுக்கே போகாதவருக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார்கள் காங்கிரஸை சேர்ந்தவர்கள். "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கலைஞர்.
  • தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கலைஞர்தான்.

  • இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கலைஞர், இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை

  • நாட்டிலேயே முதல்முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கலைஞர் தலைமையிலான அரசுதான். 
  • ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கலைஞர்தான்.
  • இவரின் மூளையே இவரின் டைரி ஆம், அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் கலைஞர்.
  • இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு"  என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கலைஞர்
  • கலைஞர், முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கலைஞர்.
  • அன்றைய திரைத்துறையில் நடைமாற்றமும், சமூகத்தில் மடைமாற்றமும் அடைய வைத்தவர் கலைஞர்.



  • மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.
  • "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கலைஞர் ஏற்படுத்தினார்
  • அரசியல் விமர்சனங்களை எளிதாக எதிர்கொள்ளக் கூடியவர் கலைஞர். டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தற்கு "நாங்கள் கேட்டது அறுவை சிகிச்சை... கலைஞர் செய்ததோ முதலுதவி" என்று விமர்சங்கள் முன்வைக்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த கலைஞர், "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம்” என்றார்.
  • ஒருமுறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கலைஞர்.
  • ராஜாஜியில் துவங்கி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை இதுபோல் 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கலைஞர்.

  • மேடையில் உரையாடலும், திரையில் கலையாடலும், ஒன்றுக்கொன்று பின்னிபிணைத்து கலை வேறு கட்சி வேறு என்றிலாமல் இரண்டையும் ஒன்றென்று ஆட்சிபுரிந்தவர்.
  • திட்டங்கள் தீட்டி, அதை நடைமுறை செய்வதில் வல்லவர் கலைஞர்.
  • ஒரு ரூபாய்க்கு 1கிலோ அரிசி, குமரியில் திருவள்ளுவருக்கு சிலை, தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கம், பெரியார் சமத்துவபுரம், அனைத்து சாதியனறும் அர்ச்சகர் என பல பல திட்டங்களாலும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு திசை தந்தவர்.
  • செம்மொழி மாநாடு நடத்தி, செந்தமிழை செழிக்கவைத்தவர் கலைஞர்
  • எழுத்தாளர், பேச்சாளர், வசனகர்த்தா, நூலாசிரியர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், பத்திரிக்கையாளர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், முதலமைச்சர், தோல்வியை காணாத தோற்காத சட்டமன்ற உறுப்பினர் என 95 வயதில் களத்தில் நின்றவர்.


தமிழ் போல் வாழ்ந்தவர்.. 
தமிழுக்காக வாழ்ந்தவர்.. 
தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர்...

கலைஞர் ஓர் சரித்திரம்.

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...