பொம்மைக்குள் அறிவியலை வைத்த தமிழன்

ஆயிரம் ஆண்டுகள் மேலாகியும், 5 மிகப்பெரிய புகம்பங்கள் தாக்கியும், பல்வேறு படையெடுப்புகளை பார்த்தும், இன்றும் அசையாமல், கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரியகோவில் தொழில்நுட்பத்தில் அடையாளமே தலையாட்டி பொம்மைகள்.
அந்த பொம்மையின் பெருவடிவம்தான் தஞ்சை பெரியகோயில்...


தற்போது சொல்லப்படும் நடன மங்கை பொம்மைகள், தாத்தா- பாட்டி பொம்மைகள் எல்லாம் தற்காலத்தில் உருவானவை.
ஆனால் ராஜா ராணி பொம்மையின் தத்துவமே வேறு!

“எதிர்க்கெடுத்தாலும் தஞ்சாவூர் பொம்மயாட்டும் தலையாட்டாதே”
என்பது வெறும் வாய்வழி பழமொழி அல்ல.
அது ஒரு வரலாற்று கதையை சுருங்கசொல்லும் வாக்கியம்.


ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல்,
ராணி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டே இருந்தாராம். வெறுத்துப் போன குடிமக்கள், இதை வாய் சொல்லால் சொன்னால் கசையடி கொடுப்பார்கள் என்று,  ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டார்களாம். அன்று ராஜாவை கேலி செய்வதற்காக உருவாக்கப்பட்ட தலையாட்டிப் பொம்மைகள் இப்போது தஞ்சையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்றாகி விட்டன.
ஆனால் அந்த பொம்மைகுள்ளும் மிகப்பெரிய தத்துவத்தையும், அறிவியலையும் ஒளித்துவைத்தான் நம் தமிழன்.




கொட்டாங்கச்சியில் பாதியை எடுத்து, அதில், களி மண்ணை அடைத்து, தலையாட்டி பொம்மைகள் செய்யப்படுகிறது. அந்தப் பொம்மையை தரையில் வைத்து, எந்த பக்கம் சாய்த்தாலும், அது, ஆடி ஆடி கடைசியாக நேராக நின்று விடும். அதுபோல் தான் தஞ்சை பெரிய கோவிலும்.

சமீபத்தில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில், தண்ணீர் எடுக்க, ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளனர். அப்போது, களிமண்ணோ, செம்மண்ணோ வராமல், வேறு ஒரு வகை மணல் வெளிவந்தது. அது, காட்டாறுகளில் காணப்படக் கூடிய மணல். சாதாரண ஆற்று மணலுக்கும், காட்டாறு மணலுக்கும் நிறைய வித்தியாசம்  உள்ளது.

சாதாரண ஆற்று மணலை விட, காட்டாறுகளில் காணப்படும் மணலில், பாறைத் துகள்கள் அதிகம் காணப்படும். மேலும், சாதாரண மணலை காட்டிலும் அம்மண் கடினமானது. கோவிலை கட்டுவதற்கு முன், அந்த மணலை அடியில் நிரப்பியுள்ளனர்.


அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட, இரு மடங்கு சுமை கீழே இருக்கிறது. கோவிலுக்கு கீழே
இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் காட்டாறு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியுள்ளனர். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி காட்டாற்று பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருகிறார்கள். இதனால், பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் Zero settlement of foundation என்பார்கள். ஆக அகழிகளால் சூழப்பட்டுள்ள தீவு போன்ற அமைப்பில், காட்டாற்று மணலால் கோவிலுக்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. தலையாட்டி பொம்மையை சாய்த்தால், எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பில் ஆடி ஆடி நேராக நின்று விடுகிறதோ, அதேபோல், பெரிய கோவிலும் எத்தகைய பூகம்பம் வந்து அசைய நேரிட்டாலும், அசைந்து, தானாகவே சம நிலைக்கு வந்து விடும். அசையுமே தவிர விழாது.


அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது.
ஆயிரம் ஆண்டுகளாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களையும், நிலநடுக்கங்களையும் தாங்கி, நான்குபுறமும் அகழிகளால் சூழப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அந்த மணல் தான்!

விளையாட்டு பொம்மையிலும் அறிவியலை வைத்து அழகு பார்த்தவன் நம் தமிழன்

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...