சாதியெனும் சாவுக்கு சவுக்கடியை தந்தவன்


அச்சம் தவிர்த்து,
ஆண்மை தவறாமால்,
ஏறுபோல் நடந்து, 
கேட்டிலும் துணிந்துநின்று கேட்டு,
கொடுமையை எதிர்த்து நின்று, 
சரித்திரத் தேர்ச்சிகொண்டு,
சாவதற்கு அஞ்சாமல்,
சீறுவோர்ச் சீறி,



செய்வது துணிந்து செய்து,
சொல்வது தெளிந்து சொல்லி,
நெற்றி சுருக்கிடாமல்,
நேர்படப் பேசி,
நையப் புடைத்து,
பிணத்தினைப் போற்றாமல்,
புதியன விரும்பி,
பெரிதினும் பெரிதுகேட்டு,
போர்த்தொழில் பழகி,
மானம் போற்றி
ரௌத்திரம் பழகி,
வீரியம் பெருக்கி,
வெடிப்புறப் பேசி,
வையத் தலைமைகொண்டு,....

தமிழாலும், தமிழுக்காகவும்வாழத்தானேஒருவன்.

சித்தனை போல திரிந்த சித்தனும் அல்ல,
பித்தனை போல அலைந்த பித்தனும் அல்ல...
ஆனால், தமிழ் பித்து பிடித்த, சித்தன்....

சூரிய துண்டுகள் இவன் இரண்டு கண்கள்...
வீரத்தின் கூர்மை இவன் மீசை...
மொழியின் மகுடம், இவன் முண்டாசு..
கோவத்தின் நிறம் இவன் திலகம்...

மனதில் உறுதி வேண்டும் என முழக்கமிட்டவன்
மக்கள் மனதில் விடுதலைக்கு வித்திட்டவன்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ  என்று கர்ஜித்தவன்
செங்கோலை வீழ்த்த, எழுதுகோலுக்கு சக்தி கொடுத்தவன்
திண்ணிய நெஞ்சம் வேணும் என தினம் தினம் சொன்னவன்
மோகத்தைக் கொன்றுவிடு அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு என்று எச்சரித்வன்

சாதியெனும் சாவுக்கு சவுக்கடியை தந்தவன்
சறுக்கிவிழும் மனிதனுக்கு சரித்திரமே நீ தான் என்றவன்
சொல்லி சென்றவர்கள் மத்தியில், சொல்லி செய்தவன்..
அச்சமில்லை அச்சமில்லை என அஞ்சாமல் வாழ்ந்த அக்னிபறவை இவன்...
இந்திய பத்திரிகையில் கார்ட்டூனை அறிமுகம் செய்து,
காவியங்களை படைத்தவன்..

புலவனாய், பத்திரிகையாளனாய்,
சுதந்திர போராட்ட வீரனாய்
பன்முக தோற்றம் கொண்ட,


இவன் புகழ் பாட ஆயிரம் காரணமுண்டு
பார் போற்றும் எங்கள் பாரதி பிறந்த தினம் இன்று 

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...