Posts

Showing posts from July, 2018

கலைஞர் ஓர் சரித்திரம் நிறைந்த சகாப்தம்

Image
தாடியில்லா பெரியார்...  பொடியில்லா அண்ணா... தொண்ணுற்று ஐந்து வயதை தொட்ட தொல்காப்பியன்... எதுகை மோனை இவருக்கு அடிமை... எழுத்துக்கள்  எது இவரின் கைக்கு வந்தாலும் அது கவிதை... எதிரியை தூற்றி பேசும்பொழுதும், சொல்லும் சொற்களில் இனிமை குறைக்காதவர்... அரசியல் ஒரு நாகரீகம் என்றால் இவர் நாகரீகத்தின் நதிக்கரை... திருகுவளையில் பிறந்து திருக்குறளுக்கு, புது அர்த்தம் புகுத்தியவர்... ஒரு முகத்தில், பல்முகத்தை கொண்டவர்... கலைஞர் திரு. மு. கருணாநிதி… நாட்டின் தன்னிகரில்லா இத்தமிழ் தலைவனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது நம் கடமை... 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969-லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் தமிழகத்தை வகிக்க வைத்தவர் கலைஞர். சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கலைஞர். ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கலைஞர் பார்த்து, "கோயிலுக்கே போகாதவருக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார்கள் காங்க