Posts

Showing posts from June, 2018

பொம்மைக்குள் அறிவியலை வைத்த தமிழன்

Image
ஆயிரம் ஆண்டுகள் மேலாகியும், 5 மிகப்பெரிய புகம்பங்கள் தாக்கியும், பல்வேறு படையெடுப்புகளை பார்த்தும், இன்றும் அசையாமல், கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரியகோவில் தொழில்நுட்பத்தில் அடையாளமே தலையாட்டி பொம்மைகள். அந்த பொம்மையின் பெருவடிவம்தான் தஞ்சை பெரியகோயில்... தற்போது சொல்லப்படும் நடன மங்கை பொம்மைகள், தாத்தா- பாட்டி பொம்மைகள் எல்லாம் தற்காலத்தில் உருவானவை. ஆனால் ராஜா ராணி பொம்மையின் தத்துவமே வேறு! “எதிர்க்கெடுத்தாலும் தஞ்சாவூர் பொம்மயாட்டும் தலையாட்டாதே” என்பது வெறும் வாய்வழி பழமொழி அல்ல. அது ஒரு வரலாற்று கதையை சுருங்கசொல்லும் வாக்கியம். ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டே இருந்தாராம். வெறுத்துப் போன குடிமக்கள், இதை வாய் சொல்லால் சொன்னால் கசையடி கொடுப்பார்கள் என்று,  ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டார்களாம். அன்று ராஜாவை கேலி செய்வதற்காக உருவாக்கப்பட்ட தலையாட்டிப் பொம்மைகள் இப்போது தஞ்சையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்றாகி விட்டன. ஆனால் அந்த பொம்மைகுள்ளும் மிகப்ப