Posts

Showing posts from December, 2017

சாதியெனும் சாவுக்கு சவுக்கடியை தந்தவன்

Image
அச்சம் தவிர்த்து , ஆண்மை தவறாமால் , ஏறுபோல் நடந்து ,   கேட்டிலும் துணிந்துநின்று கேட்டு , கொடுமையை எதிர்த்து நின்று ,   சரித்திரத் தேர்ச்சிகொண்டு , சாவதற்கு அஞ்சாமல் , சீறுவோர்ச் சீறி , செய்வது துணிந்து செய்து , சொல்வது தெளிந்து சொல்லி , நெற்றி சுருக்கிடாமல் , நேர்படப் பேசி , நையப் புடைத்து , பிணத்தினைப் போற்றாமல் , புதியன விரும்பி , பெரிதினும் பெரிது கேட்டு , போர்த்தொழில் பழகி , மானம் போற் றி ரௌத்திரம் பழகி, வீரியம் பெருக் கி , வெடிப்புறப் பேசி , வையத் தலைமைகொண்டு ,.... தமிழாலும் , தமிழுக்காகவும் … வாழத்தானே ஒருவன் . சித்தனை போல திரிந்த சித்தனும் அல்ல , பித்தனை போல அலைந்த பித்தனும் அல்ல ... ஆனால் , தமிழ் பித்து பிடித்த , சித்தன் .... சூரிய துண்டுகள் இவன் இரண்டு கண்கள் ... வீரத்தின் கூர்மை இவன் மீசை ... மொழியின் மகுடம் , இவன் முண்டாசு .. கோவத்தின் நிறம் இவன் திலகம் ... மனதில் உறுதி வேண்டும் என முழக்கமிட்டவன் மக்கள் மனதில் விடுதலைக்கு வித்திட்டவன் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ   என்று கர்ஜித்