அழுபவர்கள் எல்லாம் கோழைகள் அல்ல!

"ஒரு படம் பார்க்கும் போது அதை பார்த்து அழுபவர்கள் மிக உறுதியானவர்கள்" என ஆய்வு சொல்கிறது.

"அவர்கள் பண்பானவர்களாகவும், இரக்கம் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனவும், இவர்களுக்கு மன தைரியம் அதிகமாக இருப்பதால், அவர்களால் மற்றவர்களின் விஷயங்களை பார்த்து, அதில் இருக்கும் கஷ்டங்களை பற்றி சிந்தித்து பார்க்க முடிகிறது" எனவும் ஆய்வு சொல்கிறது.



"சில மனிதர்கள், திரையில் வரும் காட்சிகளை தங்கள் வாழ்க்கையில் நடந்துஇருப்பதோடு ஓப்பிட்டு பார்ப்பதால் மனதளவில் வருத்தப்பட்டு அழுகிறார்கள்"

சில சமயங்களில், புத்தகம் படிக்கும் போதும் சிலர் அழுகிறார்கள்.
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நம் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெளிப்படுத்துகிறது.
"கண்ணீரால் கொஞ்ச நேரத்திலேயே நிறைய விஷயங்களை  வெளிப்படுத்த முடியும்" என்று அழுகையைப்பற்றி "Adult Crying" என்ற புத்தகம் சொல்கிறது.



"அழுகை, துக்கத்தின் வடிகால்" என சில நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நம் கண்ணீரே நம் கண்ணுக்கான கிருமி நாசினி மருந்து. ஆம், கண்ணில் வளரும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளின் 95% வளர்ச்சியை 5 முதல் 10 நிமிடங்களில் கட்டுப்படுத்திவிடும்.

"ஒருவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருந்தால், அது அவருடைய உடல்நலத்தைப் பாதிக்கலாம்" என்றும் சொல்கிறார்கள்.

85% பெண்களும் 73% ஆண்களும், அழுதுமுடித்த பிறகு நன்றாக உணருவதாகச் சொல்கிறார்கள்.



"அல்லற்பட்டு ஆற்றாத கண்ணீர்’ என்று திருவள்ளுவர் சொல்வது துன்பத்தின் வெளிப்பாடுதான்.
"தட்டாதே திறந்திருக்கிறது" என்ற நூலில் கவிக்கோ அப்துல் ரஹ்மான்,
"கண்ணீர் உப்பு கலக்காவிட்டால் வாழ்க்கை சுவைக்காது" என இரண்டே வரிகளில் அழுங்கள் அது நல்லது என்று கூறியுள்ளார்.

அழுகையில் இத்தனை நன்மை இருக்க தினம் ஒரு நிமிடம்கூட கண்ணீர் சிந்தலாம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து, ஆனந்த கண்ணீர் வடிக்கலாம். மனஅழுத்தம் தரும் விஷயங்களுக்காக கண்ணீர் சிந்தி, இதன் தாக்கத்தை குறைக்கலாம். அது நம் கண்ணின் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது!



பிறப்பிலிருந்து இறப்புவரை
மனிதனுக்கு அழுகையானது

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...